2021 மே 06, வியாழக்கிழமை

'சமூதாயத்தில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்'

Niroshini   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சமுதாயத்தில் சிந்தனை மாற்றத்தைக் கொண்டுவந்து செயற்படுத்தக் கூடிய ஊடகமாக மாணவர்கள் திகழ முடியும் என மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பற்று செங்கலடி உதவிப் பிரதேச செயலாளர் என்.நவரூபரஞ்சினி தெரிவித்தார்.

பிரதேச பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட டெங்கு ஒழிப்பு சித்திரப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

டெங்கு நோய் என்பது நாட்டையும் வீட்டையும் அச்சுறுத்துகின்ற ஒன்றாக மாறியுள்ளது.

இந்த அச்சுறுத்தலை வெறுமனே சுகாதாரத்துறை அதிகாரிகள் மாத்திரமோ அன்றேல் நிருவாக அதிகாரிகள் மாத்திரமோ தனித்தனியே ஒழித்துவிட முடியாது.

இது ஒரு கூட்டு முயற்சியினால் சாதிக்க வேண்டிய விடயம். அந்த வகையில் பாடசாலை மாணவர்களின் ஊடாக டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வை ஒட்டு மொத்த சமுதாயத்துக்கே எடுத்துச் செல்ல முடியும். இதற்கு உறுதுணையாக ஆசிரியர்கள், அதிபர்கள், ஏனைய அதிகாரிகள் இருக்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .