2021 மே 06, வியாழக்கிழமை

'சுயதொழிலாளர்களை ஊக்குவிப்பதற்கு நிதி ஒதுக்கீடு'

Niroshini   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

சுழற்சி முறைக் கடன்களை வழங்குவதற்காக அரசாங்கம் இவ்வருடம்  மட்டக்களப்பு மாட்டத்துக்கு 50 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கிணங்க,மாவட்டத்திலுள்ள சுயதொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காக வேண்டி 87 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது என திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரெத்தினம், தெரிவித்தார்.

திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு , போரதீவுப்பற்றுப் பிரிவு முத்தான வியர்வை எனும் தொனிப்பொருளிலான வாழ்வின் எழுச்சி வர்த்தகக் கண்ணகாட்சி நேற்று செவ்வாய்க்கிழமை தும்பங்கேணியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வறுமையிலுள்ள மக்களை அதிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும் என்ற நோக்கோடுதான் சமூர்த்தி திட்டம் ஆரம்ப்பிக்கப்பட்டது. இத்திட்டம் கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து வாழ்வின் எழுச்சி திணைக்களமாக மாற்றப்பட்டு தற்போது செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

இருந்தபோதிலும் சமூர்த்தி திட்டத்தில் உள்வாங்கப்பட்ட அனைத்து சேவைகளும் தற்போது வரை வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றன.

ஒருமனிதன் தனது வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்கான அனைத்து செயற்பாடுகளும் இத்திட்டத்தில், உள்வாங்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அதனைப் பயன்படுத்துவது குறைவு. மக்கள் இலவசமாக கொடுப்பதையே எதிர்பார்க்கின்றனர்.

கடந்த காலங்களில் அரசும் அரச அசார்பற்ற அமைப்புக்களும் இலவசமாக மக்களுக்கு சகல பொருட்களையும் வழங்கி மக்களை சோம்பேறிகளாக மாறிவிட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 29 சமூர்த்தி வங்கிகள் உருவாக்கப்பட்டுள்ன. இவற்றில் கோடிக்கணக்கான பணம் உள்ளன. இந்த வங்கிகளினூடாக மக்கள் இலகு வழி முறைகள் மூலம் குறைந்த வட்டி வீதத்துக்கு ஒரு இலட்சம் ரூபாய் முதல் பத்து இலட்சம் ரூபாய் வரை கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவற்றை பெற்று எமது மக்கள் சுயதொழில்களை மேற்கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .