Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மார்ச் 28 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
சிறுவர்கள் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்களை செலுத்துவதாலேயே விபத்துக்கள் ஏற்படுகின்றன என காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.பி.துஸார தெரிவித்தார்.
காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச்சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் சனிக்கிழமை(26) மாலை நடைபெற்றது, அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் என்.எம்.அபுல் பஸால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தொடர்ந்துரையாற்றிய காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்கு வரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.பி.துஸார,
சிறுவர்கள் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்களை செலுத்துவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. சிறுவர்களிடம் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை செலுத்துவதற்கு கொடுக்க கூடாது.
பெற்றோர் தமது பிள்ளைக்கு மோட்டார் சைக்களை கொடுத்து விபத்தை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருக்கின்றனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று வரை(26) விபத்துக்களினால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் நான்கு பேர் காத்தான்குடியிலேயே உயிரிழந்துள்ளனர். அதில் சிறுவன் ஒருவன் மோட்டார் சைக்கிளை செலுத்திக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளான்.
சாரதி அனுமதிப்பத்திரமில்லாதவர்கள் வாகனங்களை செலுத்தக் கூடாது. வாகனங்களை செலுத்தும் போது சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனம் தொடர்பான அனைத்து ஆவனங்களும் கைவசம் சாரதிகள் வைத்துக் கொள்ள வேண்டும்.
முச்சக்கர வண்டிகளின் பின் ஆசனங்களில் மாணவர்களை ஏற்றும் போது 12 வதுக்கும் குறைந்த மாணவர்களாயின் ஆறு மாணவர்களை ஏற்றிச் செல்ல முடியும். பெரியவர்களாயின் மூன்று பேரையே ஏற்றிச் செல்ல வேண்டும்.
விபத்துக்கள் இடம்பெறும்போது, காயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உதவ வேண்டும். விபத்துக்களின் போது காயமடைகின்றவர்களின் வாழ்க்கை என்பது முக்கியமானதாகும். அவர்களுக்கு உடனடியாக உதவ வேண்டும்.
அவர்களை பார்த்துக் கொண்டு செல்லாமல் அப்படியானவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதன் மூலம் அவர்களின் உயிர் பாதுகாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
13 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago