2021 மே 08, சனிக்கிழமை

சேவையில் ஈடுபடத் தயாராகவிருக்குமாறு உள்ளூராட்சிமன்றச் செயலாளர்களுக்கு பணிப்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 16 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்,எம்.எஸ்.எம். ஹனீபா ஒலுவில்,வடிவேல் சக்திவேல்,எப்.முபாரக்     

தற்போது பெய்கின்ற அடை மழையைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலுள்ள சகல உள்ளூராட்சிமன்றங்களும் 24 மணிநேரமும் சேவையில் ஈடுபடுவதற்கு தயாராகவிருக்குமாறு அதன் செயலாளர்களுக்கு அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இன்று திங்கட்கிழமை பணித்துள்ளார்.

அடை மழை காரணமாக பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில்,  வெள்ளநீரை வடிந்தோடச் செய்யவேண்டும். அல்லது, மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து,  அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை பிரதேச செயலங்களுடன் இணைந்து மேற்கொள்ளவேண்டும்

பொதுமக்களுக்கான சேவையில் கவனமின்றிச் செயற்படும் உள்ளூராட்சிமன்றங்களின் செயலாளர்கள் மற்றும்  உத்தியோகஸ்தர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், நுளம்பு வலைகளை வழங்குவதற்கும் உரிய அதிகாரிகளுக்கு  முதலமைச்சர் பணித்துள்ளதாக முதலமைச்சின் ஊடகச்செயலாளர் எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X