2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

ஜோதிடர் வீட்டில் கொள்ளை

Yuganthini   / 2017 ஜூன் 08 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள பிரபல ஜோதிடர் ஒருவரின் வீடு உடைக்கப்பட்டுக் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம், நேற்று (7) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் இருந்தவர்கள், வீட்டைப் பூட்டிவிட்டு, களுவாஞ்சிக்குடியில் உள்ள பிரபல ஆலயம் ஒன்றின் உற்சவத்துக்குச் சென்ற சந்தர்ப்பத்திலேயே, கொள்ளையர்கள் வீட்டின் பின்கதவை உடைத்துக்கொண்டு உள்நுழைந்து, அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை, களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் மாவட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .