Kogilavani / 2017 மே 19 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு காத்தான்குடியில், டெங்கு காய்ச்சலினால் மற்றுமொரு சிறுமி, நேற்று வியாழக்கிழமை இரவு(18) உயிரிழந்துள்ளார்.
புதிய காத்தான்குடி, 3ம் குறிச்சி சபீனா வீதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியான பாத்திமா ஹிபா எனும் சிறுமியே டெங்கு காய்ச்சலினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.
குறித்த சிறுமி டெங்கு காய்ச்சலினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொழும்பு, தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர் உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடியில் கடந்த ஜனவரி மாதமுதல் இன்று வரை மூன்று சிறுமிகள் டெங்குக் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
15 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
22 minute ago