2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

தேசியக் கொடிகள் அணிவிப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்காக நாம் எனும் தொனிப்பொருளில் காத்தான்குடியில், ​இன்று (28), ஜும்ஆத் தொழுகையின் பின்னர் தேசியக் கொடிகள் அணிவிக்கப்பட்டன.

காத்தான்குடி அரசியல் களம் குழுமத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காத்தான்குடி முதலாம் குறிச்சி பெரிய மீரா ஜும்ஆப்பள்ளிவாயலில் ஜும்ஆத் தொழுகை முடிவடைந்ததன் பின்னர் நாட்டுக்காக நாம் எனும் தொனிப் பொருளில் ஜும்ஆத் தொழுகைக்கு வந்தவர்களுக்கு இலங்கையின் தேசியக் கொடி பொறிக்கப்பட்ட இலட்சனை அணிவிக்கப்பட்டன.

காத்தான்குடி அரசியல் களம் குழுமத்தின் தலைவர் முகம்மட் றிஸ்வி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதன் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .