Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூன் 03 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
“மாணவர் மத்தியில் நல்லொழுக்கம், ஆளுமை, தன்னம்பிக்கை, போன்ற சிறந்த பண்புகளை கட்டியெழுப்பி சிறந்த தலைமைத்துவம் கொண்ட மாணவ சமுதாயத்தை இந் நாட்டில் உருவாக்குவதே தேசிய மாணவசிப்பாய் படையணி பயிற்சியின் நோக்கமாகும்” என, மட்டக்களப்பு மாவட்ட தேசிய மாணவ சிப்பாய் படையணியின் பயிற்சி அதிகாரி எஸ்.காண்டீபன் தெரிவித்தார்.
பழுகாமம் - கண்டுமணி மகா வித்தியாலயத்தில் தேசிய மாணவசிப்பாய் படையணியை ஆரம்பிப்பதற்கான நிகழ்வு அதிபர் எஸ். உதயகுமார் தலைமையில் வியாழக்கிழமை (01) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொர்ந்து உரையாற்றுகையில்,
1881ஆம் ஆண்டு இலங்கையில் பிரித்தானியா அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டதே தேசிய மாணவர் சிப்பாய் படையணியாகும். இதன் நோக்கம் மாணவர் மத்தியில் நல்லொழுக்கம், ஆளுமை, தன்னம்பிக்கை போன்ற சிறந்த பண்புகளை கட்டியெழுப்பி சிறந்த தலைமைத்துவம் கொண்ட மாணவரகளை இந் நாட்டில் உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இதற்காக அரசாங்கம் பல இலட்சம் ரூபாய் செலவு செய்து வருகின்றது. இதற்காக வழங்கப்படுகின்ற சான்றிதழானது தேசிய ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக விளங்குகின்றது.
நாங்கள் இப்பயிற்சியை முன்னெடுக்கும்போது பாடசாலை நிருவாகத்தையும் மாணவர்களது கல்வியையும் குழப்பாத வகையிலையே பாடசாலைகளில் இந்த நடவடிக்கையை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.
இச்சந்தர்ப்பமானது, எமது மாவட்டத்துக்கு பல கால இடைவெளியின் பிற்பாடு எமக்கு கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இப்பயிற்சியானது முழுக்க முழுக்க மாணவர்களை மையப்படுத்தியதாகவே இடம்பெற்று வருகின்றது. தங்களது பாடசாலையின் அன்றாட ஒழுக்க விடயங்களில் இருந்து உடற்பயிற்சி, அணிநடை போன்ற அனைத்து விடயங்களும் இதன்மூலம் கற்றுக் கொடுக்கப்படுகின்றது.
மாணவர்கள் மத்தியில் பல திறமைகள் ஒழிந்து கிடக்கின்றது அதனை முன்வந்து செய்வதற்கு தயங்குகின்ற நிலை தற்போது மாணவர் மத்தியில் காணப்படுகின்றது. இந்த திறமைகளை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்பாக இந்தப் பயிற்சி நெறி அமைகின்றது. இதன் ஊடாக மாணவர்களின் திறமைகளை இனங்கண்டு அதன்பால் வழிப்படுத்தப்படுவார்கள். உண்மையில் பாடசாலையை மையப்படுத்திய இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்கள் இப்பயிற்சி நெறியில் கலந்துகொண்டு சமூகத்தில் நீங்கள் முன்மாதிரியான ஒழுக்கசீலர்களா மிளிரவேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.
30 minute ago
44 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
44 minute ago
45 minute ago