2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

திடீர் சுற்றிவளைப்பு; காத்தான்குடியில் 29 பேர் கைதாகினர்

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில், பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின்போது, சுமார் ஆறு மணித்தியாலங்களில் 29 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, காத்தன்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தெரிவித்தார்.

பிடிவிறாந்து பிறக்கப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டுவந்த 05 சந்தேகநபர்கள், 2,690 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் மூவர், 180 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரும், சட்டவிரோதமான முறையில் வாகனம் செலுத்திய 20 பேருமே இவ்வாறு கைதாகியுள்ளனர்.  

நேற்று (18) மாலை 4 மணிமுதல் இரவு 10 மணி வரையான காலப் பகுதியில்  காத்தன்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான 26 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மெண்டிசின் உத்தரவின் பேரில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஜெயரட்ணவின் வழிகாட்டலில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கைதுசெய்யப்பட்ட நபர்கள், மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .