2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

தமிழ், முஸ்லிம் சமூகங்கள் எதிர்நோக்கவுள்ள சவால்கள் தொடர்பில் கலந்துரையாடத் தீர்மானம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்காலத்தில் சந்திக்கவுள்ள சவால்கள் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையும் காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களினுடைய சம்மேளனமும் அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேற்படி சம்மேளனத்தின்  முக்கியஸ்தர் ஏ.எல்.இஸட் பஹ்மி தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவைக்கும் காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களினுடைய சம்மேளனத்துக்கும் இடையில் சம்மேளன மண்டபத்தில் சனிக்கிழமை (24) இரவு நடைபெற்ற சந்திப்பின்போதே, இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும் இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம், அதன் செயற்பாடு தொடர்பில்  சம்மேளனப் பிரதிநிதிகளுக்கு பேரவையின் முக்கியஸ்தர்கள் விளக்கிக் கூறினர்.

தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டும்; எனவும் வலியுறுத்தப்பட்டது.  

தமிழ் மக்கள் பேரவையானது தமிழ் பேசும் மக்களை உள்ளடக்கி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதாகவும் அரசியலுக்கு அப்பால் குழுவாக இருந்து தமது பேரவை செயற்படுவதாக அப்பேரவையின் தலைவர் ரி.வசந்தராசா தெரிவித்தார்.
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .