Editorial / 2020 மார்ச் 12 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையொப்பமிடுவதற்கு ஏற்பாடுகளை செய்துகொடுக்குமாறு, சிறைச்சாலை அத்தியட்சகருக்கு, சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ், இன்று (12) கட்டளையிட்டுள்ளார்.
2005.12.25 திகதியன்று, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக, பிள்ளையான் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
02 Mar 2026
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
02 Mar 2026
02 Mar 2026