2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

தாக்குதலில் காயமடைந்தவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 26 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர்ப் பகுதியில் சகோதரர்கள் இருவருக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பின்போது, படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அப்பகுதியைச் சேர்ந்த இ.பாலேந்திரன் (வயது 44) இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

மேற்படி சகோதரர்கள் இருவருக்குமிடையில் புதன்கிழமை (25) ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில்  பொல்லினால் தாக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் காயமடைந்துள்ளார்.

இந்த நபரை தாக்கியதாகக் கூறப்படும் அவரது சகோதரரை கைதுசெய்துள்ளதாகவும்  இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X