2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

‘த.தே.கூட்டமைப்பின் தேசிய பொங்கல் விழா’

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 க.விஜயரெத்தினம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் "தமிழ்த் தேசிய பொங்கல் விழா", மட்டக்களப்பு,  பட்டிப்பளையில், பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில், இம்மாதம் 18ஆம் திகதி பிற்பகல் 02 மணியளவில் நடைபெறவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு அம்சங்களுடன் நடைபெறவுள்ள இந்தப் பொங்கல் விழாவுக்கு, பிரதம அதிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொள்ளவுள்ளார்.

விசேட அதிதிகளாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசனும், கௌரவ அதிதிகளாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, த.கனகசபை, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்தப் பொங்கல் விழாவின் தொடக்கவுரையை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனும், தலைமையுரையைத் தவிசாளர் சி.புஸ்பலிங்கமும், சிறப்பு தமிழ்த் தேசிய உரையை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், தமிழ்த் தேசியக் கொள்கை விளக்கவுரையை, தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் நிகழ்த்தவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--