Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 நவம்பர் 15 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்,கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணிக் கிராமத்துக்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் புகுந்த 3 காட்டு யானைகளால் மக்கள் பெரும் அல்லோல கல்லோலப்பட்டுள்ளனர்.
கிராமத்தில் புகுந்த 3 காட்டு யானைகளையும் மக்கள் தீப்பந்தம் ஏந்தியும் பட்டாசு கொழுத்தியும் கிராமத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
இக்காட்டுயானைகள் அப்பகுதியிலிருந்த தென்னம் தோட்டத்தையும் அழித்துவிட்டுச் சென்றுள்ளது.இதனால் 10இற்கும் மேற்பட்ட தென்னைகளும் வாழை மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
தொடர்அடை மழையினால் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள தமக்கு காட்டு யானைகளின் தொல்லைகளும் அட்டகாசங்களும் தொடர்ந்த வண்ணமுள்ளன. இவற்றுக்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்காமலிருப்பது எமக்கு மிகுந்த வேதனையளிக்கின்றது.
சம்மந்தப்பட்டவர்கள் காட்டுயானைகளை எமது கிராமங்களுக்குள் வருவதைத் தடுக்காமலிருந்தால் எமது பாதிப்புக்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும்.
எனவே, சம்மந்தப்பட்டவர்கள் காட்டுயானைகள் எமது கிராமங்களுக்குள் ஊடுருவுவதை தடுக்க முன்வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை,மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை கண்ணகி நகர் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு காட்டு யானைகள் தாக்கியதில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 4 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்..
பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று பார்வையிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் அவர்களது இருப்பிட, உணவு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், அதிகாரிகளுடனும் தகவல் வழங்கி வாழ்வாதாரத்தினை ஏற்படுத்த ஆவண செய்தார்.
21 minute ago
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
35 minute ago
1 hours ago