2021 மே 15, சனிக்கிழமை

தெரு நாய்களுக்கு கற்பத்தடை சத்திர சிகிச்சை

Niroshini   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
 
2020ஆம் ஆண்டில் விசர் நாய்க்கடி நோயற்ற இலங்கையை நோக்கிய செயற்றிட்டத்தின் கீழ், நாய்களுக்கு விசர்நாய்த் தடுப்பூசி போடுதல் மற்றும் நாய்களுக்கு கற்பத்தடை சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் செயற்பாடு நேற்று சனிக்கிழமை (03) மட்டக்களப்பு,தும்பங்கேணி கால்நடை வைத்திய பிரிவுக்குட்பட்ட காந்திபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
 
இதன்போது தெருநாய்களுக்கு கற்பத்தடை சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதோடு விசர்நாய்த் தடுப்பூசிகளும் போடப்பட்டதாக தும்பங்கேணி பிரதேச கால்நடை வைத்திய அலுவலகத்தின் வைத்தி அதிகாரி எஸ்.துஷியந்தன் தெரிவித்தார்.
 
இச்செயற்பாடுகளின் மூலம், எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் தெருநாய்க்களின் தொல்லைகளையும் விசர்நாய்களையும் கட்டுப்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .