Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
தீவிரவாதத்துக்கு எதிரான தீவிர பிரசாரத்தை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிரிவின் ஏறாவூர்க் கிளை தெரிவித்தது.
'வன்முறை ஒழிப்போம், மானுடம் சிறக்க நன்முறை வளர்ப்போம், மனிதநேயம் காப்போம், தேசத்தைக் காக்க நேசத்தை வளர்ப்போம், தீவிரவாதத்தை வேரறுப்போம்' என்ற உப தலைப்புகளில் ஏறாவூர் நகரில்; பரவலாக இன்று (19) சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அச்சுவரொட்டிகளிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுவரொட்டிகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இஸ்லாம் பயங்கரவாத மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதிகள். இவ்வாறாக இஸ்லாம் குறித்தும் அதனைப் பின்பற்றும் முஸ்லிம்கள் குறித்தும் பிறமத அன்பர்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ள நச்சுக் கருத்துகளை வேரோடு களையகற்றி, இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் அழகிய முன்மாதிரிப் பிரசாரம் நாடெங்கிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இப்பிரசாரம் எதிர்வரும் ஜனவரி 29ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் வாழும் 90 சதவீதமான பிறமத அன்பர்களின் செவிகளுக்கும் மனங்களுக்கும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்பதைப் பற்றி மும்மொழிகளிலும் சுமந்துசெல்லும் அளப்பரிய முயற்சி இப்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
35 minute ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago
6 hours ago