Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஜனவரி 25, திங்கட்கிழமை
Editorial / 2019 நவம்பர் 18 , பி.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியாஸ் ஆதம்
மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்துக்கு, நாட்டு மக்கள் நன்றி செலுத்தும் வகையில் ஜனாதிபதித் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை கோட்டாபயவுக்கு அளித்து, அவரை வெற்றிபெறச் செய்துள்ளனரென கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அதிகப்படியான வாக்குகளை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அளித்து நாட்டு மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளனர். பொருத்தமான ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பது, வரவேற்கத்தக்க விடயமாகும்.
பேராதரவினைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நல்லாட்சி எனும் போர்வையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் கொண்டு வரப்பட்ட ஆட்சியில், வெளிநாட்டு சக்திகளின் சதிவலையில் நாடு சிக்குண்டு, நாட்டினுடைய இறைமை, பாதுகாப்பு என்பன கேள்விக்குறியாக இருந்த, இந்தக்காலப் பகுதியில் நடாத்தப்பட்ட தேர்தலில் நாட்டினுடைய வளங்களையும் பாதுகாப்பதற்கு பொருத்தமான ஒருவரை மக்கள் தெரிவு செய்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
சந்தேகங்கள், இனவாதம் களையப்பட்டு, மூவின மக்களும் நிம்மதியாகவும், ஒற்றுமையுடனும் வாழக்கூடியதொரு சூழல் உருவாக்கப்படும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அவ்வாறான விடயங்களை செய்வதற்குரிய ஆற்றலும், வல்லமையும் கோட்டாபய ராஜபக்ஷவிடமே உள்ளதெனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago