Gavitha / 2015 நவம்பர் 22 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளமை தொடர்பாக தெற்கு அபிவிருத்தி, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கவின் கவனத்துக்கு கொண்டு வரப்படும் என்று கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஏ.பி. கலப்பதி சந்திரதாஸ தெரிவித்தார்.
மாகாண சபை உறுப்பினர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பகட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, ஞாயிற்றுக்கிழமை (22) கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில்; சுமூகமான சூழ்நிலை காணப்படுகிறது. ஆயினும், கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் வாழும் பிரதேசம் என்பதை கவனத்தில் கொண்டு அவர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
'பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலையில் எதிர்பாராத சில நிகழ்வுகளால் மாகாண சபை உறுப்பினர்கள் தனிமைப்பட வேண்டிய நிலை ஏற்படலாம். மாகாண உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்த பொலிஸார், எவ்வித முன் அறிவித்தலும் இன்றி விலக்கப்பட்டுள்ளார்கள்.
இது தொடர்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருடன் தொடர்பு கொண்டு எழுத்து மூலமான கோரிகையொன்றை முன் வைத்து, நீக்கப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பை மீளப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்படும்' என்று கூறினார்.
26 minute ago
26 minute ago
41 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
26 minute ago
41 minute ago
53 minute ago