2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

நிதி திரட்டும் பாத யாத்திரை

Niroshini   / 2015 நவம்பர் 22 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சுகாதார அமைச்சின் 2020ஆம் ஆண்டு நிகழ்ச்சித் திட்டத்துக்கான நடமாடும் கண் சிகிச்சை பிரிவை உருவாக்குவதற்கான நிதி திரட்டும் திட்டமான 'வாழ்க்கைக்கு ஒளி, ஒளிக்கான யாத்திரை என்ற இலங்கையின் அகலத்துக்கு' எனும் தொனிப்பொருளிலான பாத யாத்திரை எதிர்வரும் 26ஆம் திகதி காலை மட்டக்களப்பில் ஆரம்பமாகிறது.

இந்த யாத்திரையானது மட்டக்களப்பின் காந்தி சதுக்கத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபாலவினால் காலை 8 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படும்.

இதன்போது, கல்லடி, காத்தான்குடி, காங்கேயனோடையினூடாக சென்று மண்முனை பிள்ளையார் கோவிலை சென்றடையும். நவம்பர் 27ஆம் திகதி காலை மண்முனையிலிருந்து மீண்டும் ஆரம்பித்து மகிழடித்தீவு, பட்டிப்பளை, மாவடிமுன்மாரியினூடாக புழுக்குனாவயை சென்றடையும்.

பின்னர் அம்பாறை பதுளையினுடாக கண்டியை 4ஆம் திகதி சென்றடையும்.

இதையடுத்து,டிசம்பர் 5ஆம் திகதி நிதி திரட்டும் நிகழ்ச்சி கண்டி சிட்டி சென்டரில் இடம்பெறும். மீண்டும் இவ் யாத்திரை 6ஆம் திகதி கண்டியிலுருந்து ஆரம்பித்து கேகாலை கம்பஹாவினூடாக கொழும்பு காலி முகத்திடலை 12ஆம் திகதி சென்றடையும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X