2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

நீரைச் சிக்கனமாகப் பாவிக்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இம்முறை மட்டக்களப்பில் மழை வீழ்ச்சி குறைவாகக் காணப்படுகின்றமை காரணமாக குளத்து நீரைச் சிக்கனமாகப் பாவிக்குமாறு குடியிருப்பாளர்களிடமும்; விவசாயிகளிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குளத்து நீரைச் சிக்கனமாகப் பாவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பிரசாரம் நேற்று (18) ஆரம்பிக்கப்பட்டதாக உறுகாமம் பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.நிறோஜன் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,' இம்முறை பருவமழை பொய்த்துள்ளதால், போதியளவான நீரைக்  குளங்களில்  தேக்கிவைக்க முடியவில்லை. அதனால், கைவசமுள்ள நீரை விரயம் செய்யாது பாவிக்க வேண்டிய  நிலைமைக்கு விவசாயிகளும்  குடியிருப்பாளர்களும் தள்ளப்பட்டுள்ளார்கள்.

தற்போதைக்கு உன்னிச்சைக் குளத்தில் 14,224 ஏக்கர் அடி நீர் உள்ளது. (சுமார் 16 அடி) தினமும் 25 ஆயிரம் கியூபிக் மீற்றர் நீர் (20 ஏக்கர் அடி நீர்)  குழாய்நீர் விநியோகத்துக்காக  தேவையாகும்.

குறைந்தபட்சம் அடுத்த 06 மாதகாலங்களுக்கு  குழாய்நீர் விநியோகத்துக்கான நீரைக் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
மேலும், தற்போது தேங்கியிருக்கும் நீரைக் கொண்டு அடுத்துவரும் 25 தொடக்கம் 30 நாட்களுக்கே விவசாயிகளுக்கு வழங்கப் போதுமாகும்.

தற்சமயம் உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் சுமார் 15,703 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் விநியோகிக்கப்படுகின்றது.

நீரை முழு அளவில் வயல்களில் தொடர்ச்சியாக தேக்கிவைக்க வேண்டியதில்லை.
மேலதிக நீரை வீணாக வாய்க்கால்களிலோ, ஆறுகளிலோ, வாவிகளிலோ, கடல்களிலோ கலக்க விடுதல் போன்றவற்றை விவசாயிகள் தவிர்க்க வே;ணடும்.

நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்படும் வயற்  பிரதேசங்களுக்கு இரவிலும் பராமரிப்பு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்துள்ளோம்.  

விவசாயிகள், பொதுமக்கள் என்று அனைவரும் சிக்கன நீர் முகாமைத்துவத்தைக் கடைப்பிடித்தால், நன்மை அடையலாம்.
வரட்சியைச் சமாளிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .