2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2016 ஜூலை 13 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இலங்கை தபால் சேவைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட அலுவலர்களுக்கான இருவார கால கடமை அறிமுக பயிற்சிநெறி மட்டக்களப்பு அஞ்சல் பயிற்சி நிறுவகத்தில் பிரதம போதனாசிரியர் பி.நரேந்திரன் தலைமையில் இன்று புதன்கிழமை காலை ஆரம்பமானது.

அலுவலக விடயதானங்கள், நிதிக் கையாளுகை, முகாமைத்துவமும் நிர்வாகமும், வாடிக்கையாளர் சேவை, அஞ்சல் பரிவர்த்தனைகள், அஞ்சல் இயங்கு முறைகள் பற்றிய பயிற்சிகள் இடம்பெறுகின்றன.

மட்டக்களப்பு அஞ்சல் பயிற்சி நிறுவகத்தில் 9 ஆண்கள் 13 பெண்கள் உட்பட 22 அலுவலர்கள் பயிற்சி பெறுகின்றார்கள்;.
இலங்கையில் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலேயே தமிழ் மொழிமூலப் பயிற்சிநெறி இடம்பெறுகின்றது.

தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த 112 பேர் கடந்த 11ஆம் திகதி  வழங்கப்பட்ட நிமனத்தைப் பெற்றுள்ளார்கள்.
நாடளாவிய ரீதியில் 374 அதிகாரிகள் புதிதாக அஞ்சல் சேவை அதிகாரிகளாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் 317 பேர் பெண்கள் ஆவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X