Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 மே 29 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் போஷாக்குக் குறைபாட்டினால் 946 பேர் இன்னமும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர் என அதன் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா, இன்று தெரிவித்தார்.
இப்பிரிவில் போஷாக்குக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட 1,257 பேரில், 311 பேர் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் எனவும் அவர் கூறினார்.
போஷாக்குக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் முன்னேற்ற அறிக்கையானது, அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மாதாந்தம் சமர்ப்பிக்கப்படுகின்றன.
அந்த வகையில், போஷாக்குக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இம்மாதம் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
ஒரு வயதுக்குட்பட்ட 2.5 கிலோகிராமுக்கு குறைவான நிறையுடைய 73 பிள்ளைகளில் 47 பேர் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள்.
5 வயதுக்குட்பட்ட குள்ளமடைந்த 65 பிள்ளைகளில் 26 பேரும், மெலிவடைந்த 33 பிள்ளைகளில் 17 பேரும், நிறைகுறைந்த 143 பிள்ளைகளில் 84 பேரும் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள்.
இதேவேளை, 5 வயதுக்குட்பட்ட நிறைகூடிய 24 பிள்ளைகளில் 17 பேர் நிறைகுறைந்தும் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள்.
உடற்திணிவுச் சுட்டெண் 18.5 க்குக் குறைவான கர்ப்பிணிகள் 59 பேரில் 24 பேரும், உடற்திணிவுச் சுட்டெண் 18.5 க்குக் குறைவான 18 -49 வயதுக்குட்பட்ட 90 பேரில் 27 பேரும், உடற்திணிவுச் சுட்டெண் 24.9 க்குக் குறைவான 18 -49 வயதுக்குட்பட்ட 770 பெண்களில் 69 பேரும் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் எனவும் அவர் கூறினார்.
போஷாக்குக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், பிள்ளைகள், கர்ப்பிணிகள், பெண்கள் ஆகியோரடங்கிய 946 பேரை பாதுகாக்க வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
56 minute ago
2 hours ago
2 hours ago
17 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
2 hours ago
17 Oct 2025