Suganthini Ratnam / 2016 மார்ச் 08 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூ.ஹரன் ஆகிய இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.
இவர்கள் இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில்; இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில், பூ.பிரசாந்தன் கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி காத்தான்குடிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது சகோதரரான பூ.ஹரனும் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
25 minute ago
31 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
31 minute ago
38 minute ago
2 hours ago