Freelancer / 2026 மார்ச் 13 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய நெருக்கடியான காலக்கட்டத்திற்கு மத்தியில், இலங்கையில் வீட்டிலிருந்து வேலை செய்வதை (Work from Home) நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என வர்த்தக, வாணிப மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அது குறித்தும் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எரிசக்தியை பாதுகாத்துக்கொண்டு மக்கள் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.
எரிவாயு சேமிப்பு நிலையமொன்றை நிர்மாணிக்கவும், சப்புகஸ்கந்த மற்றும் முத்துராஜவெல எண்ணெய் தொட்டிகளை நிர்மாணிக்கவும், அதேபோல் திருகோணமலையில் உள்ள பத்து எண்ணெய் தொட்டிகளை நவீனமயமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. R
11 minute ago
32 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
32 minute ago
2 hours ago
2 hours ago