2021 ஜனவரி 23, சனிக்கிழமை

பிலிப்பைன்ஸ் பிரஜைகள் இருவர் சுகவீனம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 11 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, கல்லடிப் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் விடுதியில் குளிர்பானம் அருந்திய பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் பிரஜைகள் இருவர் திடீர் என்று சுகவீனம் அடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  

குறித்த விடுதியில் சனிக்கிழமை (08) இரவு வழங்கப்பட்ட குளிர்பானத்தை  23, 25 வயதுகளையுடைய இவர்கள் இருவரும் அருந்தியுள்ளனர். இதன் பின்னர், இவர்கள் மயக்கம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து விசாரணையை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .