2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

மகளிர் தினத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2020 மார்ச் 08 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச மகளிர்  தினத்தையொட்டி, கவனயீர்ப்புப் போராட்டமொன்று, மட்டக்களப்பு, காந்திபூங்கா முன்னால் இன்று (08) முன்னெடுக்கப்பட்டது.

பெண்கள் கூட்டமைப்பும்  அரச சாரா தொண்டு நிறுவனங்களின்  இணையமும்  ஏற்பாடு செய்திருந்த இந்தக் கவனயீர்ப்பில் பெண்கள், சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள், மதத் தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, “அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்”, “அரசே!, பெண்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தியுள்ள அனைத்து நுண்கடன்களையும் இரத்துச் செய்” என்ற கோரிக்கைகளைப் பெண்கள் முன்வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .