2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் சுயேட்சைக் குழு நியமனப் பத்திரம் தாக்கல்

Editorial   / 2020 மார்ச் 13 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன் 

 

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது சுயேட்சைக் குழு, இன்று வெள்ளிக்கிழமை (13) நண்பகல், நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்திருப்பதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

புதிய காத்தான்குடியைச் சேர்ந்த மொஹொமட் தம்பி உவைஸ் தலைமையிலான சுயேற்சைக்குழுவே நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

நியமனப் பத்திரங்களைக் கையேற்கும் இரண்டாவது நாளான இன்று(13),  மாவட்டச் செயலக வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .