ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2020 ஜனவரி 07 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாநகர சபையின் இவ்வாண்டுக்கான முதலாவது சபை அமர்வு, நாளை மறுதினம் (09) காலை 9.30 மணிக்கு மாநகர சபையின் சபா மண்டபத்தில் நடைபெறுமென, அம்மாநகர சபையின் மேயர் தியாகராசா சரவணபவன் அறிவித்துள்ளார்.
நடக்கவிருக்கும் சபை அமர்வில், சபைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய நிதிக்குழு, கலாசாரக் குழு, சுகாதாரக் குழு ஆகியவற்றின் சிபார்சுகள் என்பனவற்றுடன் 2020ஆம் ஆண்டுக்கான நிலையியற் குழுக்களுக்கும் விசேட குழுக்களுக்குமான புதிய உறுப்பினர்கள் தெரிவும் நடைபெறவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன், மாநகர பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான பல முக்கிய விடயங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் மேயர் அறிவித்துள்ளார்.
5 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago