Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 03 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன், க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளராக நியமனம்பெற்ற திருமதி சுஜாதா குலேந்திரகுமார், வலய கல்வி அலுவலகத்தில் இன்று (03) காலை தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வி.மயில்வாகனம் நேற்றுடன் ஓய்வுபெற்றுச்சென்றுள்ள நிலையில், புதிய கல்வி பணிப்பாளர் கடமையேற்றுள்ளார்.
மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிவந்த நிலையில், வலயத்தின் புதிய கல்வி பணப்பாளராக திருமதி சுஜாதா குலேந்திரகுமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய கல்வி பணிப்பாளருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதுடன் வலயத்தில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதன் பின்னர் தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர்கள்,உதவி கல்வி பணிப்பாளர்கள்,கோட்டக்கல்வி அதிகாரிகள்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,வலய கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
சிறந்த கல்வி நிருவாக சேவையாளரான இவர் வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் அதிபராகவும் கல்குடா மற்றும் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
23 minute ago
50 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
50 minute ago
1 hours ago
3 hours ago