2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

மட்டு. இ.போ.ச பஸ் மீது தாக்குதல்

எம்.எம்.அஹமட் அனாம்   / 2020 ஜனவரி 05 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான பஸ் மீது, இனந்தெரியாத நபர்கள் சிலர், இன்று (05) தாக்குதல் நடத்தியுள்ளனரென, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில், வாகனேரி என்னும் இடத்தில் பயணிக்கும் போது, இனந்தெரியாத நபர்கள் சிலர், சாரதியின் முன் பக்க கண்ணாடிக்கு கல்லெறிந்து, தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து மகரகம நோக்கிய இந்தப் பயணத்தில் பயணம் செய்த பயணிகள் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், பஸ்லின் முன் பக்க கண்ணாடி மாத்திரம் சேதமடைந்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X