Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2020 மார்ச் 02 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு சிறைச்சாலை சிறைக்கைதிகளின் நலன்புரிச் சங்க வருடாந்தப் பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும், நேற்று (01) இரவு நடைபெற்றது.
இந்நிகழ்வின்போது சிறைச்சாலை அத்தியட்சகர் சுஜீர விஜேசேகர உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், சிறைக்கைதிகளின் நலன்புரி சங்க உறுப்பினர்கள் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
மட்டக்களப்பு ஓய்வு விடுதியில் நலன்புரிச் சங்கத் தலைவர் என்.வி. ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற நிர்வாகத் தெரிவின்போது, சங்கத்தின் புதிய தலைவராக ராஜன் மயில்வாகனம் தெரிவுசெய்யப்பட்டார்.
பொதுக் கூட்டத்தின்போது, நலன்புரி சங்கத்தால் கடந்தாண்டு முன்னெடுக்கப்பட்ட செயல்பாடுகள், 2020ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
சிறைக் கைதிகளின் நலன்புரிச் சங்கம் கைதிகளின் நலன்களைப் பேணுவது, கைதிகளுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வை அணுகுவது, கைதிகளின் குடும்பப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெறுவதற்கு அனுசரணை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
மட்டக்களப்பு சிறைக் கைதிகள் நலன்புரிச் சங்கம் 1975ஆம் ஆண்டு முதல் சிறைக் கைதிகளின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்டு வருவதாக அதன் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago