2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

மட்டு. மாவட்ட முன்னாள் செயலாளர் பொதுத் தேர்தலில் போட்டி

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2020 மார்ச் 09 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் செயலாளர் மாணிக்கம் உதயகுமார், நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.

இவர், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளராகவும், கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

மண்முனைப்பற்று, செங்கலடி, வாகரை, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராகக் கடமையாற்றியுள்ளதுடன், மலையக புதிய கட்டுமான உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

2017ஆம் தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளராகக் கடமையாற்றிய இவர், இவ்வாண்டு பெப்ரவரி மாதம் முதல் ஓய்வு பெற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X