2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் இடர் காப்பு வேலைத்திட்டத்துக்கு 15 சதவீத நிதி

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில்; அபிவிருத்திக்காகப்  பயன்படுத்தும் நிதியில் சுமார் 15 சதவீதமான நிதியை இடர் காப்பு வேலைத்திட்டத்துக்காகச் செலவு செய்வதாக மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மிச்நகர், மீராகேணி, ஆறுமுகத்தான் குடியிருப்பு, ஏறாவூர் நகர், செங்கலடி உள்ளிட்ட பல பகுதிகளை வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக 36 மில்லியன் ரூபாய் செலவில் வடிகாலமைப்புத்திட்ட ஆரம்ப நிகழ்வு மிச்நகரில் இன்று  (22) நடைபெற்றது.

அங்கு அவர் உரையாற்றியபோது,'இயற்கை அனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டமானது  ஓர் இடர் வலயமாக மாறியிருக்கின்றது.

நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தி வேண்டுமாயின்,  அனர்த்தத் தடுப்பு வேலைத்திட்டத்தில் நாம்  கவனம் செலுத்த வேண்டும். இதில் கவனம் செலுத்தாமல், வேறு அபிவிருத்திகளைச் செய்தால்    பயனில்லாமல் போகும்.

அனர்த்தத் தடுப்பு முயற்சிகள் இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுவதன் மூலம் அபிவிருத்தியின் முழுமையான பயனைப் பெற்று, மக்களின் வாழ்க்கைத் தரத்தைச் சிறப்பாகப் பேண முடியும்.' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X