2021 ஜனவரி 23, சனிக்கிழமை

மட்டக்களப்பில் 80க்கும் மேற்பட்ட கிராம அலுவலர்களுக்கான வெற்றிடங்கள்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 18 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 02 வருடகாலமாக 80க்கும் மேற்பட்ட கிராம அலுவலர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன என ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் எஸ்.ஞானசிறி, இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

பதில் கடமை மூலமே இந்தக் கிராம அலுவலர்; பிரிவுகளுக்கான கடமைகள் நிறைவேற்றப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.

மேலும், பதில் கடமைக்குரிய வேதனம் மேலதிகமாக வழங்கப்படுகின்றபோதும், அது போதாது என்பதை கிராம அலுவலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த விடயம் தொடர்பில் அதிகார உயர்மட்டத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
ஒருதொகுதியாக ஏககாலத்தில் கிராம அலுவலர்கள் நியமிக்கப்படுவதும் அதேபோன்று, ஒரேநேரத்தில் ஓய்வுபெற்றுச் செல்வதுமே இத்தகைய அதிகளவான வெற்றிடங்கள் ஒரு மாவட்டத்தில் நிலவுவதற்குக் காரணமாகும்.

வருடாவருடம் நியமனங்கள் இடம்பெறுமாயின், இந்த வெற்றிடங்கள் நீண்டகாலமாக நிலவுவதற்கு வாய்ப்பில்லை. ஒருதொகுதியினர் ஓய்வுபெற, இன்னொரு தொகுதியினர் கடமையைப் பொறுப்பு ஏற்கக்;கூடியவாறு கிராம அலுவலர்கள்  நியமிக்கப்பட வேண்டும்.

இலங்கை நிர்வாகச் சக்கரத்தில் இருக்கின்ற அடிப்படையான அதேவேளை, முக்கியமான நிர்வாகிகள் கிராம அலுவலர்கள். எனவே, அவர்கள் வேலைப்பளுவின்றி கடமையாற்றுவதற்கு வழிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 385 கிராம அலுவலர் கடமைப் பிரிவுகள் உள்ளன எனவும் அவர் கூறினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .