Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
2015ஆம் ஆண்டு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் நடத்தப்பட்ட தேசிய பசுமை விருதுப் போட்டியில் மட்டக்களப்பு மாநகரசபைக்கு தேசிய மட்டத்தில் விருது கிடைத்துள்ளதாக மாநகரசபை ஆணையாளர்; எம்.உதயகுமார் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
இவ்விருது கடந்த 05ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாநகர ஆணையாளர் மா.உதயகுமாரிடம் வழங்கப்பட்டது.
அகில இலங்கை பூராகவும் பலதரப்பட்ட அரச நிறுவனங்கள், பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள் பங்குபற்றிய இப்போட்டியில் கிழக்கு மாகாணத்தில் திணைக்களங்களுக்குள் மட்டக்களப்பு மாநகரசபைக்கு மாத்திரம் இவ்விருது கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago