2021 மே 06, வியாழக்கிழமை

மட்டு. வின்சன்ட் மகளிர் சாதனை

Niroshini   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
 
வெளியாகியுள்ள 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவி பத்மசுதன் தக்ஷினியா 193 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

இந்தப் பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய மாணவிகளில் 50 பேர் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் திருமதி. இ.கணகசிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை,மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட பேத்தாளை சந்திரகாந்தன் வித்தியாலய மாணவன் ஜெகதீசன் சர்ஜீதன் 190 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் முகம்மட் ஜவாஹிர் அகமட் முஷாரப்,மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட வவுணதீவு கரவெட்டி அரசினர் கலவன் தமிழ் பாடசாலை மாணவி சுதாகர் அஸ்வினி ஆகியோர் 189 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .