2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

மணல் அகழ்வுக்கான அனுமதியை இரத்துச் செய்யக் கோரிக்கை

பேரின்பராஜா சபேஷ்   / 2017 மே 22 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச எல்லைப் பகுதியினுள் மணல் அகழ்வதற்;கான அனுமதியை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கோரி செங்கலடிப் பிரதேச செயலக முன்றலில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலுப்படிச்சேனை மற்றும் வேப்பவெட்டுவான் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், செங்கலடி – பதுளை வீதியை அண்டியுள்ள கிராமவாசிகள்; பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில், 'இலுப்படிச்சேனையை அண்டிய பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் அதிகளவில்; மணல் அகழ்வு இடம்பெறுகின்றது. இதன் காரணமாக மாவடியோடை மற்றும் புத்தம்புரி ஆறுகளின் பெரிதாகி  ஆழம் அதிகரிப்பதுடன், மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றது.
அகழப்படும் மணலைக் கொண்டுசெல்வதற்கு கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுவதால், இங்குள்ள வீதிகள் சேதமடைகின்றன.

மேலும், மணல் அகழ்வதற்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் மணல் அகழ்ந்து கொண்டு செல்வதற்கு காவல் அரண்களிலுள்ள பொலிஸார் இலஞ்சம் வாங்குகின்றார்கள். ஊத்த மணலுக்கு 50 ரூபாயும் ஆற்று மணலுக்கு  100 ரூபாயும் இலஞ்சமாகப் பொலிஸருக்கு வழங்கப்படுகின்றது' என்றனர்.

ஆர்ப்பாட்ட இறுதியில் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதரிடம் பொதுமக்கள் கையளித்தனர்.

இதன்போது பிரதேச செயலாள் தெரிவிக்கையில்,  'இந்த மகஜரில் அடங்கியுள்ள கோரிக்கைகள்  சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்பதுடன், மணல் அகழ்வுக்கான அனுமதி வழங்குவதில் பிரதேச செயலகம் மாத்திரம் தொடர்புபடவில்லை. இதனுடன் பல திணைக்களங்களும் தொடர்புபட்டுள்ளது' என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X