Suganthini Ratnam / 2017 ஜூன் 01 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன், பா.மோகனதாஸ்
களுவாஞ்சிக்குடி, துறைநீலாவணையிலுள்ள வாவியில் புதன்கிழமை (31) இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த கந்தன் சிவராசா (வயது 52) என்பவரை முதலை கடித்த நிலையில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தோணியிலிருந்து தான் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பெரிய முதலையொன்று தோணியை அடித்துடைத்து, தன்னை வீழ்த்திக் கடித்ததாக அம்மீனவர் தெரிவித்தார்.
இவரது கூக்குரல் சத்தத்தைக் கேட்டு, ஏனைய மீனவர்கள் இவரைக் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .