Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 13 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
“மேற்கத்தைய நாடுகளில், நாட்டுத் தலைவர்கள், மக்களேடு மக்களாகப் பயணிப்பது போன்று, எமது ஜனாதிபதி முன்மாதிரியாகச் செயற்பட்டு வருகின்றார்” என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாதாசிவம் வியாளேந்திரன் தெரிவித்தார்.
கடந்த நான்கரை வருடங்களில் செய்து முடிக்காத வேலைகளை புதிய அரசாங்கம் கடந்த 45 நாள்களில் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில், அவரது காரியாலயத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தான் வழங்கிய வாக்குறுதிகளை சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றார் என்றும் ஊழல் இல்லாத நிர்வாகத்தை மக்களுக்கு வழங்கும் நோக்குடன், கிராமபுற மக்களின் அபிவிருத்திகென கல்வி, பொருளாதாரம் உட்பட சகல துறைகளிலும் கவனம் செலுத்தப்படுகிறன என்றும் தெரிவித்தார்.
மேலும், இதனைப் பார்த்து ஏனையவர்களும் கைகொள்ள வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago