2020 நவம்பர் 25, புதன்கிழமை

மயிலம்பாவெளியில் கைத்தொழில் உற்பத்தி நிலையம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 07 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, மயிலம்பாவெளிப் பிரதேசத்தில் சுமார் 63 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கைத்தொழில் உற்பத்தி நிலையம் இன்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது,  
 
நிலையான வாழ்வாதாரச் செயற்பாடுகளை  மேம்படுத்துதல் எனும் திட்டத்தின் கீழ், 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
 
இக்கைத்தொழில் உற்பத்தி நிலையத்தில்  தேங்காய் எண்ணெய்; தயாரித்தல், கடலை அரைத்தல், மிளகாய் அரைத்தல், அரிசி அரைத்தல் உள்ளிட்டவை இங்கு மேற்கொள்ளப்படவுள்ளன.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இக்கைத்தொழில் உற்பத்தி நிலையத்தில் வேலைவாய்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .