Editorial / 2019 நவம்பர் 20 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா,கே.எல்.ரி.யுதாஜித்
நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது, கட்சித் தீர்மானங்களை மீறி, கட்சி மாறிச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபை உறுப்பினர் பாலசிங்கம் முரளிதரனை, கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகள், பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபையின் பால்சேனை வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாலசிங்கம் முரளிதரன், கடந்த 09ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இணைந்து கொண்டதாக ஊடகங்கள் மூலம் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராகச் செயற்பட்டதால், இவர் மீது நடவடிக்கை எடுக்கும் முகமாக இவரின் கட்சி உறுப்புரிமை, கட்சி வழிப் பதவிகள் மற்றும் பொறுப்புக்கள் என்பவற்றில் இருந்து நீக்கப்பட்டு ள்ளார்.
அத்துடன் இவரின் பிரதேச சபை உறுப்பினர் பதவியினையும் உடன் நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன் இன்னும் சில உறுப்பினர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
23 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago