Janu / 2026 மார்ச் 24 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை மாணவிகளின் தொடர்ச்சியான கல்வியை உறுதிப்படுத்தும் நோக்கில், மாணவிகளுக்கு விடாய்க்கால அணையாடை (Sanitary Napkins) வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டும் நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அனைத்து அரச பாடசாலைகளிலும் தரம் 6-க்கு மேற்பட்ட வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவிகள் மற்றும் அரச உதவி பெறும் விசேட பாடசாலைகளில் பயிலும் பருவமடைந்த மாணவிகள் என சுமார் 1.05 மில்லியன் (10.5 இலட்சம்) மாணவிகளை உள்ளடக்கும் வகையில் இத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு மாணவிக்கு 1,440 ரூபா பெறுமதியான, தலா 720 ரூபாய் வீதம் இரண்டு வவுச்சர்கள் (Vouchers) வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் மாணவிகள் தமது விருப்பத்திற்கேற்ப, தலா 120 ரூபாய் பெறுமதியான 08 அணையாடைகள் கொண்ட 12 பக்கெட்டுகளை அல்லது தலா 180 ரூபாய் பெறுமதியான 10 அணையாடைகள் கொண்ட 08 பக்கெட்டுகளை வருடத்தில் கொள்வனவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
4 minute ago
6 minute ago
14 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
6 minute ago
14 minute ago
35 minute ago