Princiya Dixci / 2016 மார்ச் 19 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் சேட்டை புரிந்த குற்றஞ்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞனை, எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக், வியாழக்கிழமை (17) உத்தரவிட்டுள்ளார்.
பாடசாலையை விட்டு வீதியால் செல்லும் மாணவி மீது குறித்த இளைஞன், முச்சக்கரவண்டியில் சென்று பாலியல் சேட்டை புரிந்து வந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர், கல்முனை பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த இளைஞன், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு வியாழக்கிழமை, ஆள் அடையாள அணிவகுப்பு இடம்பெற்ற போது மாணவி சம்மந்தப்பட்ட இளைஞனை அடையாளம் காட்டினார்.
மேலதிக விசாரணையை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
31 minute ago
28 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
28 Jan 2026