Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வடிவேல் சக்திவேல் / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேசத்துக்குட்பட்ட பாலையடிவட்டை கிராமத்தில் அமைந்துள்ள பொதுச்சந்தை, மீண்டும் இன்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பாலையடிவட்டையில் 1990ஆம் ஆண்டு காலத்தில் பாரியதொரு பொதுச்சந்தை காணப்பட்டது. அக்காலத்தில் அச்சந்தையில் தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்கள மக்களும் ஒன்றுகூடி பல வியாபாரங்களை மேற்கொண்டு வந்த நிலையில், யுத்த யூழல் காரணமாக அந்த சந்தைத் தொகுதி வியாபாரம் விடுபட்டு அதற்குரிய கட்டடங்களும் அழிக்கப்பட்டன.
இதனால் அப்பகுதி மக்களின் வியாபார கேந்திர நிலையமாகக் காணப்பட்ட சந்தை இல்லாமல் போனதுடன், இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த உறவுகளும் விரிசலடைந்தன.
போரதீவுப்பற்றுப் பிரதேச சபைபியின் கீழுள்ள இந்த பொதுச்சந்தைத் தொகுதியை, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்து, அப்பகுதி மக்களின் உற்பத்திகளை விற்பனை செய்யும் இடமாக மாற்ற வேண்டுமென்ற நோக்குடன் தற்போது போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, பிரதேச சபைத் தவிசாளர் யோ.ரஜனி உள்ளிட்ட பல முக்கியஸ்த்தர்கள் முயற்சித்துள்ளனர்.
அதற்கிணங்க, பாலையடிவட்டை பொதுச்சந்தை, இன்று காலை 8.30 மணிக்கு மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அரச அதிகாரிகள், பிரதேச மட்ட அரசியல் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், வியாபாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
57 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
3 hours ago