எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுர்வேத வைத்தியசாலையின் அபிவிருத்தித் தொடர்பில் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நகரத் திட்டமிடல் நீர் வழங்கல், உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடனான கலந்துரையாடல், நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஸல் காஸிம் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது வைத்தியசாலையின் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
இலங்கையின் ஒரேயொரு யூனானி ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையாக இவ்வைத்தியசாலை அங்கிகரிக்கப்பட்டுள்ள போதும், அங்கு அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான பாரியளவு நிதியொதுக்கீடுகளில் குறைபாடு காணப்படுவதையும் இவ்வைத்தியசாலையின் விடுதித் தேவையைப் பூர்த்தி செய்ய மிகவும் பிரயத்தனத்துக்கு மத்தியில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தால் காத்தான்குடி முதியோர் இல்லத்தின் காணியொன்று பெற்றுக்கொடுக்கப்பட்டபோதும் விடுதிக்கான கட்டட நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என்ற விடயமும் அமைச்சர் றவூப் ஹக்கீமின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வைத்தியசாலை விடயம் தொடர்பாக சுகாதார சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் பேசி இதற்குரிய தீர்வுகளைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தார்.
53 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago