Niroshini / 2016 மார்ச் 23 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்
'இஸ்லாமியர்கள் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்து மதமாற்றுவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்தை இரண்டு வாரங்களுக்குள் வாபஸ் பெறாவிட்டால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்வேன்' என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாருக் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, காத்தான்குடியில் செவ்வாய்க்கிழமை(22)இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
'நல்லாட்சியில் இன உறவை மேம்படுத்துவதற்காக பல்வேறு தரப்பினரும் செயற்பட்டுவரும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் சிலர் இவ்வாறான இனவாத கருத்துகளை தெரிவித்து வருவது இன ஐக்கியத்தை பாதிக்கும் செயற்பாடாகும்.
சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் துவேசங்களை கதைத்து வாக்குகளைப்பெறும் நடவடிக்கையை மஹிந்த தரப்பினர் மேற்கொண்டுவருவது போல், மறுபக்கத்தில் தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பிலான துவேசங்களை கதைத்து வாக்கு பெறும் நடவடிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் போன்றவர்கள் மேற்கொண்டுவருகின்றனர்' என்றார்.
41 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago