2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

லொறி தீக்கிரை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2020 மார்ச் 04 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள சிகரம் பிரதேசத்தில் நேற்று (03) சிறிய லொறியொன்று முற்றாகத் தீப்பற்றியெரிந்துள்ளது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிகரம் கிராமத்தில் வசித்து வரும் முஹம்மட் நாசர் என்பவருக்குச் சொந்தமான லொறியே இவ்வாறு தீப்பற்றியுள்ளது.

அதிகாலை வேளை திடீரென லொறி எரிந்துகொண்டிருந்ததை அவதானித்த அயலவர்கள், லொறி சொந்தக்காரரை எழுப்பி, தீயை அணைத்துள்ளனர்.

இது நாசகரச் செயல் என லொறி சொந்தக்காரர், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X