2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

'வடக்கு, கிழக்கு தமிழரின் பூர்வீகம் என்பதை மறைக்க திட்டமிட்ட சதி'

Suganthini Ratnam   / 2016 மே 26 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பேரின்பராஜா சபேஷ்
 
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பூர்வீகம் என்பதை மறைப்பதற்காக பல தொல்பொருட்கள் திட்டமிட்ட வகையில் ஒழிக்கப்பட்டன. தொல்பொருள் திணைக்களத்திற்குக் கூட கொண்டுசெல்லப்பட்ட தமிழ் பிராமிய எழுத்துக்கள் இன்றுவரை மறைக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் இந்த நாட்டின் பூர்வீக குடிகள் என்பதை மறைப்பதற்காக 150க்கும் மேல் தொல்பொருள் தமிழ் பிராமிய எழுத்துக்கள் வாசிக்கப்படாது வைக்கப்படடுள்ளன என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைக்கப்பட்ட உழவர் சிலை திறந்துவைக்கும்  நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'வந்தாறுமூலை பிரதேசமானது தமிழர்களின் பூர்வீக வரலாற்றை உள்ளடக்கியது என்பதை அண்மைக்காலத்தில் புராதன தொல்பொருள் சின்னங்கள் கைப்பற்றப்பட்டதை ஆதாரமாகக் கொண்டு ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.  
 
தமிழ் மக்கள் இந்த பகுதியின் பூர்வீகக் குடிகள் என்பது காலம் காலமாக பலராலும் கூறப்பட்டாலும், அதற்கான தொல்பொருள் சான்றுகள் இன்னும் காணப்படுகிறன்றன.
 
நாகர் குலத்தைச் சேர்ந்த குரோதரன் மற்றும் மகோதரன் என்ற இருவர் மாணிக்க ஆசனத்துக்காக சண்டையிட்டார்கள் அவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக புத்த பிரான் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு வந்தார் என மகாவம்சம் கூறுகிறது. தமிழ் இனம் இந்த நாட்டின் பூர்வீக குடிகள் வாழ்ந்திருக்கிறது என்பதை மகாவம்சம் நிரூபிக்கின்றது.
 
நாகர் குலம் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் வந்தாறுமூலையிலும் தேங்கிக் கிடக்கின்றன. இதனை பாதுகாக்க வேண்டிய கடமை உங்களுக்கும் உண்டு எங்களுக்கும் உண்டு' என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .