2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

’வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தவண்ணமே உள்ளன’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 01 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

நல்லாட்சியிலும் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தவண்ணமே உள்ளன. இந்த வன்முறைச் சம்பவங்களை நிறுத்துவதாக இருந்தால், வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும்  குற்றவாளிகளுக்கு அதிகபட்சத் தண்டனை உடனடியாகவே  வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு இவ்வாறு அதிகபட்சத் தண்டனை உடனடியாக வழங்கினால், இந்த நாட்டில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறையும் எனவும் அவர் கூறினார்.

மூதூர், பெரியவெளிக் கிராமத்தில் மூன்று சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, மட்டக்களப்பு நகரில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது. 'மூதூர், பெரியவெளியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு அதிகபட்சத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அப்பாவி சிறுமிகள் மீது மேற்கொள்ளப்படும் இவ்வாறான  சம்பவங்களுக்கு எதிராக நாம் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்தி வருகின்றோம். அந்தப் போராட்டங்களில் நாம் பல கோஷங்களை முன்வைக்கின்றோம். இருந்தபோதிலும்,  இவ்வாறான ஜனநாயகப் போராட்டங்களை எம்மவர்களில் சிலர் கொச்சைப்படுத்துகின்றனர்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .