2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

'வன்முறைக் கட்டமைப்புகளை வைத்துக்கொண்டு நிலையான சமாதானத்தை அடைய முடியாது'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வன்முறைக்கான கட்டமைப்புகளை தொடர்ந்தேர்ச்சையாக வைத்துக் கொண்டு நிலையான சமாதானத்தை அடைய முடியாது என இலங்கை அபிவிருத்திக்கான  உதவு ஊக்க மையத்தின் இணைப்பாளர் ஏ.சொர்ணலிங்கம் தெரிவித்தார்.

வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் பணிப்பாளர் சபைக் கூட்டம், மட்டக்களப்பு பயனியர் வீதியிலுள்ள கலையாக்கக் கூடத்தில் இன்று (11) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'யுத்தத்துக்குப் பின்னரான அணுகுமுறைகளில் இரண்டு முக்கிய அம்சங்கள் கரிசனைக்கும் அமுலாக்கத்துக்கும்; எடுக்கப்பட வேண்டும் என்று யுத்தம் இடம்பெற்ற நாடுகளில் பணியாற்றி ஆய்வுகளை மேற்கொண்ட வல்லுநர்கள் சிபாரிசு செய்கின்றார்கள்.

யுத்தக்குப் பின்னரான நிலைமையில் சமாதானத்துக்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குதல், ஏற்கெனவே வன்முறைக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டுவந்த கட்டமைப்புகளை நிர்மூலமாக்குதல் என்று இந்த இரண்டு அணுகுமுறைகளையும் சமாந்தரமாக அமுலாக்குதல் வேண்டும்.

இந்த இரண்டு கருமங்களும் ஏக காலத்தில் சமாந்தரமாக இடம்பெற்றாலே, நிலையான சமாதானத்துக்கான நிகழ்ச்சிநிரல் வெற்றி பெறும்.

நிலைமாறு கால நீதியிலும் இந்த இரு அணுகுமுறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆகவே, இலங்கையில் இதுவரையில் நடந்துமுடிந்த வன்முறைச் சூழமைவு இனிமேலும் நடக்கக்கூடாது என்பதற்கான நடவடிக்கைகள் சமாந்தரமாக எல்லாத் தரப்பினராலும் வெளிப்படையாக முன்னெடுக்கப்பட வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .